Monday, February 13, 2012

எனது வாழ்க்கை…

அன்று மணமாலை சூடி
மணப்பொண் கோலத்தில்
மணமேடையில் நீ அமர்ந்து
தாலிக்காக காத்திருக்கும் நொடியில்
சபையின் முதல்வரிசையில்
உன்னை வாழ்த்த வந்தமர்ந்த என்னைப் பார்த்து
பதறிய மனதோடு கலங்கிய கண்கள்
உன் தோல்வியைக் காட்டியது
யாரும் அறியாமல்
என் புன்னகை அதை மூடி மறைத்தது.
கொடுமையிலும் கொடுமை
காதலி கல்யாணத்துக்கு வாழ்த்துச் சொல்வது.
என்னசெய்வது
கடைசியாக என் காதலியாய்
பார்க்கவேண்டும் என்ற ஆசையின் தவிப்பு.
இன்று நீ
மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்
மணம் வீசுகின்றாய்
தூரே நின்று நான் சுவாசிக்கின்றேன்.
நெருங்கும் இடைவெளியில் நீயிருந்தும்
நேசத்தோடு விலகி நிற்கின்றேன்.
வௌவால் வந்து முட்டினாலும்
காற்று கதவைத் தட்டினாலும்
ஓடி வந்து பார்க்கின்றேன்
ஒரு வேளை நீயாய் இருக்குமோ என்ற கனவோடு.
மணமாகியதையும் மறந்து
தொலைபேசியில் வைக்கின்ற தொடர்பு
என்னை மறக்கவில்லை என்பதை
நினைவு படுத்தினாலும்
வேறு பெண்ணை மணக்க
என்மனம் விரும்பவில்லை
வாழும் வரை
உன்னைக் காதலிக்க வேண்டுமென்பதற்காக....
அன்பே..!
ஒருத்தியை மணந்து கொண்டு
பெண் சுகத்தை அனுபவிக்க சொல்லி
தொல்லை செய்கின்றாய்.
உன் பேச்சுக்கள் தருகின்ற சுகத்தை
எந்தப் பெண்ணாவது தருவாளா?
இருந்தால் காட்டிவிடு
அவளையே மணக்கின்றேன்.
பெண்ணே...!
கனவில் நீ தந்த சுகமொன்றே போதும்
தயவு செய்து
பெண் சுகத்துக்காக என்னை மணக்க சொல்லாதே..!
இருக்கின்ற வலி போதும் அதையும் கிள்ளிவிடாதே..!
பருவத்தில் செய்தபயிர்
வீடுவந்து சேரவில்லை
விளைபயிரும் என்னிடமில்லை
விழிகொண்டு தவிக்கின்றேன்
வழியின்றி விழிக்கின்றேன்.

1 comment:

  1. தமிழ் குடில் என்கிற குழுவில் கவிதைப் போட்டி ஒன்று நடக்கிறது... தலைப்பு குழந்தை தொழிலாளி... கவிதை பதிய வேண்டிய கடைசி நாள் 15 .2 .12 . கவிதை 15 வரிகள் குறையாமலும் பிற மொழிசொற்கள் கலப்பிலாமலும் இருத்தல் வேண்டும்.. நீங்கள் விரும்பினால் கவிதை போட்டியில் பங்கேற்கலாம். குழுவில் இணைய இங்கே சொடுங்குங்கள். http://www.facebook.com/groups/thamizhkkudil/

    ReplyDelete