Wednesday, October 10, 2012

பெண்களின் காதல்


பெண்களின் காதல்
ஆண்களின் காதலை விட
அழகு....

அவன் கைகோர்த்து நடக்க
மடி சாய்ந்து உறங்க
தோள் சாய்ந்து அமர
மனம் திறந்து பேச
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
அவன் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து
அவனை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகு

ஒரு வார்த்தை பேச மாட்டாளா
என்று ஏங்கிய அவனுக்கு பிறகு அவனை 
பேசி பேசியே கொல்லும் போது
பெண்களின் காதல் அழகு

தங்கம் வைரம் அம்மு செல்லம்
என்று குழந்தையென கொஞ்ச சொல்லி
கெஞ்சும் போதும் பின்னர் அவனை செல்லமாய் 
குழந்தையாய் கொஞ்சும் போது
பெண்களின் காதல் அழகு...

தலை வலியென சிறிய பொய்
சொன்னாலும் நம்பி
கண்ணீர் சிந்தி அவனை 
காதல் மழையில் நனைய வைக்கும் போது
பெண்களின் காதல் அழகு...


ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்து விட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு அவனை 
தவிக்க விடும் போது
பெண்களின் காதல் அழகு...

யாரேனும் அவனை தவறாக பேசும் போது
அங்கே பேசாமல் இருந்து விட்டு
பின்னர் அவனை திட்டி தீர்க்கும் போது
பெண்களின் காதல் அழகு.....

யார் கூடவும் பகிர்ந்து கொள்ள முடியாத
விசயங்களை அவனோடு மட்டும் பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகு....

அவன் முதல் முறை காதலை சொல்லும் போது
முறைத்து பார்த்து விட்டு
பின்னர் அவனை காதல் கண்கள் கொண்டு
தாக்கும் போது பெண்களின் காதல் அழகு....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எறியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எறியும் போதும் பெண்களின் காதல் அழகு
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது பெண்கள் தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்வியை 
காட்டி கொடுக்கும் தாடியும் பீடியும்

ஆனால் பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்....

காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை
பெண்களின் காதலை
ஒரு போதும் ஒப்பிட முடியாது
ஆண்களின் காதலோடு......

Friday, August 10, 2012

உன்னை வாழ வாழ்த்தவா?


உன்னிடம் நான்
இலவசமாய்க்கூட
எதிர்பாக்காத பரிசு

நான் வேண்டாம் என்று
சொல்லியும்
நீ தந்து விட்டு போன பரிசு

ஆமாம்..
என் மரணம் வரை
மறக்க முடியாத உன்
பிரிவென்ற பரிசு

இலவசமாய் எதுவும்
கிடைக்கவில்லை என்பதற்காய்
பெறுமதி வாய்ந்த ஆண்கள்
அழுவது பிடிக்காதென்றாய்

ஓ..
அப்படியென்றால்
பெறுமதி வாய்ந்த
நீ கிடைக்கவில்லை என்று
நானழுவது தவறா...?

சொல் உன்னை நினைத்துக்கொண்டே
நான் இறக்க வேண்டுமென்றா..
பெறுமதி வாய்ந்த என் மறதியை
கடனாய் வாங்குவதாய் களவாடி போனாய்..?

சொல் நீ என் பெறுமதி வாய்ந்தவள்
என்பதால் உன்னை வாழ வாழ்த்தவா?

இல்லா பிரிவில் மட்டும் நீ
தனியாய் போனதை எண்ணி
திட்டவா.....?

இலவசமாய்க்கூட
யார் பார்வையும் படாதவனாய்
படு மோசமான பாலைவனமாய்க் கிடந்தேன்
எதற்கடி விழுந்தாய் என் மேல்
முதல் மழையாய்?

குடிசை வாங்க கூட பெறுமதி இல்லாதவனை
எதற்கடி கோட்டைகளை வாங்குமளவுக்கு
நம்பிக்கைகளை ஊட்டினாய்...?

அன்று உன் முதல் பார்வையிலே
நான் உருகிய போது
நான் பலவினமானவனென்று
எண்ணவில்லை

உன் பார்வையின் பலத்தை தான்
பாராட்ட நினைத்தேன் ஆனால்
இன்று என் நினைவே பார்வையாக
பார்வையே நினைவாக
இலவசமாய்க் கழிக்கிறேன்

கையெழுத்து மட்டும் போட
பேனா பிடித்த கிராமத்தவனை
கவி எழுத வைத்தவளே..

உன்னால் எப்படி முடிந்தது....?

இலவசமான என்னை
பெறுமதி வாய்ந்ததாய்
ஆக்கவும்...

பெறுமதி வாய்ந்த உன்னை
பெற்றோர்களுக்காய்
இலவசமாக்கவும்...

என்
கண்ணிரை துடைத்து விடத்தான்
உன் கரங்களுக்கு எட்டாது
என் கவிதையின் கண்ணிரை
துடைப்பதற்காகவேனும்...

ஆழமான சமுத்திரத்தையே
அடக்கி வைத்திருக்கும்
உன் கண்களால் இலவசமாய்
பார்த்து விட்டுப்போ

பெறுமதி வாய்ந்த
உன் கண்ணீரைத்தான்
தேடி திரிகிறது என் கவிதைகள்
நாளைய என் மரணத்துக்காய்
அழுவதற்கு....!




Tuesday, July 17, 2012

காதல் சொல்ல....


ஆயுதம் கைதனில் ஏந்தவில்லை
துளி இரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் யுத்தம் மட்டும் நேர்கிறது
இந்த காதலால் எனதுள்ளத்தில்...........!


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் துடிக்க
இதமான வீணை
என் இதயத்தில் மீட்ட
மொத்தமாய் இழந்திட்டேன்
உன்னிடத்தில் என்னை...........!


மாயம் ஏதும் நேரவில்லை
நீ மந்திரமும் போடவில்லை
உன் கண்கள் செய்யும் வித்தையினால்
கரைந்து போனேன் உன்னிடத்தில் .......!


எட்டத்தில் நீயுமில்லை
எட்டா நிலவாய் -நான்
உன்னை நினைக்கவுமில்லை
எண்ணமிடும் நொடிதனிலே
என்னதருகில் நீ இருக்கிறாய்........!


இனிய குணம்
இதமான பேச்சு
கொஞ்சம் குறும்பு
செல்ல கோபம்
எத்தனை எத்தனையடா உன்னிடத்தே
அன்னை ஊட்டிய பால் போல்
அத்தனையும் கலந்து போனதடா
எந்தன் உதிரம் தன்னிலே.......!


மழை போல் என்னுள்
துளியென விழுந்த நீ
இன்றோ வெள்ளமென மாறி
என் நெஞ்சில் கரை புரண்டு ஓடுகின்றாய் ....!


இராத்திரி நிலவும்
குளிர் வாடை காற்றும்
நீண்ட நேர நிசப்தமும்
என்னை நிதமும் இமிசிக்கிறது
உந்தன் அருகாமையை எதிர்பார்த்து ..........!


கனிந்திட்ட காதல் சொல்ல
இந்த கன்னியிடம் வார்த்தை இல்லை
கவிதையால் காதல் சொல்ல
இந்த பேதைக்கு தெரியவில்லை
கண்ணீரால் ஓர் நொடியில்
காதல் சொல்கிறேன்
உற்று நோக்கடா
ஓர் நொடி எந்தன் விழிகளை .....!



Tuesday, July 3, 2012

என்னை பிரிந்து செல்லாதே !


என்னை பிரிந்து செல்லாதே
என் இதயம் கொத்திய
கொக்கே
நீ
எத்தனை நாள்
காத்திருந்தாய்
இதற்கு?


உனது கண்களினால்
என்னை
விண்வெளியேற்றி
ஆராய்ச்சி செய்ய
வைத்தாய்
காதல் பற்றி!


நீயேன்
வியர்வை சிந்துகிறாய் ?
பூக்களிலிருந்து பனித்துளி
விழுவது போலவேயிருக்கிறது
எனக்கு!


உன்
கூந்தலை ஏன் பறக்க விட்டு
செல்கிறாய்
காற்றில்?
பூக்கள் போராட்டம்
நடத்தும்
உன் கூந்தல் வாசனையை தடை செய்யென!


உனது
இடையே தான் பூமியின்
கடையளவு !


உதடுகளை
எச்சில் கொண்டு நனைக்காதே
சூரிய வெளிச்சத்தில்
தங்கம் மின்னுவதாகி விடும் !


நீ
நடந்து செல் பரவாயில்லை
ஊர்ந்து செல்லும் உயிரினமாவது
பூமியிலிருந்து கொண்டே
சொர்க்கம் காணட்டும்
உன் பட்டு பாதம் பட்டு !


நீ
ஒரு கணம்
சிரித்து விட்டு
செல்
வருடம் பல கடந்தும்
பாலைவனங்கள்
நீரூற்றாக கிடக்கும் !


நான் தான் கவிஞன்
ஆகிற்றே
இப்படியே
மையூற்றி எழுதும்
பேனாவில்
பொய்யூற்றி எழுதுகிறேன்
என்னை பிரிந்து செல்லாதே ! அம்மு குட்டி




கைபேசியை


நானும் நீயும் ஒரே அழைப்பொலி
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய கைபேசியிலோ அழைப்பு
வந்த போது நாம் இருவருமே அவரவர்
கைபேசியை எடுத்துப்பார்த்து விட்டு
நீ என்னையும்
... நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?


தோழிக்கு சொல்வது போல்
உன் கைபேசி எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்ட போது நீ அவசரமாக முறைத்து
மறுத்து விட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என குறுந்தகவல் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?


முதன் முதலில் நான்
உன்னை கைபேசியில் அழைத்த போது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?


அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேச வேண்டி இருந்தது மன்னித்துக்கொள்
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த குறுந்தகவல்கள்
என் குறுந்தகவல் சேமிப்பியையே
நிரப்பி விட்டது உனக்கு
தெரியுமா ?


ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்க மாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்ன தான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்ட போது
தைரியம் இருந்தா சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?


அவசரத்தில் நீ கைபேசியை வைத்து
இருந்த இடத்தைப்பார்த்து விட்டு
ஒரேயொரு நாள் நான் உன்
கைபேசியாக இருக்கிறேனே
என நான் கேட்ட போது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


ஏன் இன்னும் இந்த பழைய
கைபேசியையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலி பேசும்
நண்பர்களிடம் இது தான்
நீ முதன் முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த கைபேசி
என கூற முடியுமா ?


இப்போவெல்லாம் நம்ம பையன்
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டா தான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
குறுந்தகவல்களுக்ககாகத்தான் என்று ?


என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு குறுந்தகவலை நீ படித்து விட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
கைபேசியின் விசைப்பலகை
மட்டும் அல்ல
என் விரல்களும் தான்
என உனக்குத்தெரியுமா ?


நண்பர்களுடன் இருக்கும் போது
நீ கேட்ட முத்தத்தை நான் தரவில்லை
என கோபமாக நீ கைபேசியை அணைத்து விட்டு
சென்று விட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் கைபேசியில் 
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?


காதலில் விழுந்த பின் 
என் கைபேசி படும்பாடு 
சொல்லி மாளாதடி 
என் செல்லமே !

Thursday, June 14, 2012

வந்து உணர்வை கொடு. . !


ஊரெல்லாம் அடங்க என்
உணர்வுகளோ விழிக்க
நான் மட்டும் தனிமையில். . !
நள்ளிரவின் துணையினில். . !
நீ விட்ட எச்சங்களை
நான் மீட்டி வாழ்கின்றேன். . !
என் மனத்தின் அதிர்வுகளை
என் விரல் வழி அசைக்கின்றேன். . !
நான் அசைக்கும் இசையினால் தான்
நானே வாழ்கின்றேன். . !
அசைகின்ற காற்றே. . !
என் அதிர்வுகளையும் எடுத்து செல்லு. . !
நீ போகும் வழிகளிலே
என் நினைவுகளையும் தூவிச்செல்லு. . !
தூவிச்செல்லும் இடங்களிலே
என் துணை இருந்து விட்டால். . !
தூங்காது மீட்டுகின்றாள் என்று
தூது கொஞ்சம் சொல்லி விடு. . !
ஏங்காது இறுகி விட்டாள் என்று
என் நிலையை சொல்லி விடு. . !
வாழ்கின்றாள் உயிரோடு
வந்து உணர்வை கொடுக்க சொல்லு. . !


Tuesday, June 12, 2012

என்னை விட்டு சென்றாய்




ஒரு நாளும் புரியாது
விண்மீன்கள் வட்டமிட்டு
சிரிக்கின்றன...


தெருவிளக்குகள்
எல்லாம் அறிவுரை
கூறிய வண்ணமாய்
இருந்தன...


தனிமையோ
என்னை பார்த்து
ஏளனமாய் இகழ்கின்றன...


கூடி இருக்கும்
கும்பல் கூத்தாடி
குமாளம் இட்டன...


காரணம்....


நீ
என்னை விட்டு
சென்றாய்
என்று நினைத்து....


அவர்களுக்கு
தெரியாது
நீ
என்னை விட்டு
செல்லவில்லை


என் காதலை
பற்றி எனக்கு
முழுதாய்
புரியவைத்தாய் என்பதை.........!