Friday, October 21, 2011

உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு…


நீ இப்போது எங்கே இருக்கிறாய் .
தொலைபேசி அலறுகிறது
ஒரு தடைவையாவது தூக்கமாட்டாயா..?..?

தொலைபேசியை வீட்டிலே விட்டுவிட்டு;;….
... நீ வெளியே சென்று விட்டாயோ..?

வெளியே செல்வதாயின் - நீ
யாருடன் சென்றிருப்பாய்

ஒரு வேளை தொலைபேசியை கையிலே …வைத்துக்கொண்டு
யாரோடாவது உரையாடிக்கொண்டிருக்கிறாயோ..?

உனது உரையாடலிலாவது
நான் ஞாபகப்படுவேனா…?..

நீ ஏன் எனக்கு
ஒழிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய்.

என்னை எங்கோ எறிந்து விட்டு…நீ
காணமல் போனாய்.

காற்றில் உனது வாசனைகளை அனுபவிக்கிறேன்.
கனாக்களில் உனது வருகையை அவதானிக்கிறேன்.

இப்போதைய உனது தோற்றம் எப்படிஇருக்குமோ…
மாற்றம் நிகழ -நான் காரணம் ஆனேனோ….?..?

எனது தொலைபேசி அழைப்பை தூக்காவிடிலும்
துண்டித்தாவது விடுவாயா..?..?
உன் இருத்தலையாவது நான் உறுதிப்படுத்தி கொள்வதற்கு…

No comments:

Post a Comment