Wednesday, October 10, 2012

பெண்களின் காதல்


பெண்களின் காதல்
ஆண்களின் காதலை விட
அழகு....

அவன் கைகோர்த்து நடக்க
மடி சாய்ந்து உறங்க
தோள் சாய்ந்து அமர
மனம் திறந்து பேச
இப்படி கணக்கில்லா ஆசைகள் இருந்தும்
அவன் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய் அமர்ந்து
அவனை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகு

ஒரு வார்த்தை பேச மாட்டாளா
என்று ஏங்கிய அவனுக்கு பிறகு அவனை 
பேசி பேசியே கொல்லும் போது
பெண்களின் காதல் அழகு

தங்கம் வைரம் அம்மு செல்லம்
என்று குழந்தையென கொஞ்ச சொல்லி
கெஞ்சும் போதும் பின்னர் அவனை செல்லமாய் 
குழந்தையாய் கொஞ்சும் போது
பெண்களின் காதல் அழகு...

தலை வலியென சிறிய பொய்
சொன்னாலும் நம்பி
கண்ணீர் சிந்தி அவனை 
காதல் மழையில் நனைய வைக்கும் போது
பெண்களின் காதல் அழகு...


ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்து விட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு அவனை 
தவிக்க விடும் போது
பெண்களின் காதல் அழகு...

யாரேனும் அவனை தவறாக பேசும் போது
அங்கே பேசாமல் இருந்து விட்டு
பின்னர் அவனை திட்டி தீர்க்கும் போது
பெண்களின் காதல் அழகு.....

யார் கூடவும் பகிர்ந்து கொள்ள முடியாத
விசயங்களை அவனோடு மட்டும் பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகு....

அவன் முதல் முறை காதலை சொல்லும் போது
முறைத்து பார்த்து விட்டு
பின்னர் அவனை காதல் கண்கள் கொண்டு
தாக்கும் போது பெண்களின் காதல் அழகு....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எறியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எறியும் போதும் பெண்களின் காதல் அழகு
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது பெண்கள் தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில்
ஆண்களின் காதல் தோல்வியை 
காட்டி கொடுக்கும் தாடியும் பீடியும்

ஆனால் பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
அவர்களுக்கு மட்டுமே அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
இந்த காதல் வானில் சிறகொடிந்த
பறவைகளே அதிகம்....

காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை
பெண்களின் காதலை
ஒரு போதும் ஒப்பிட முடியாது
ஆண்களின் காதலோடு......

Friday, August 10, 2012

உன்னை வாழ வாழ்த்தவா?


உன்னிடம் நான்
இலவசமாய்க்கூட
எதிர்பாக்காத பரிசு

நான் வேண்டாம் என்று
சொல்லியும்
நீ தந்து விட்டு போன பரிசு

ஆமாம்..
என் மரணம் வரை
மறக்க முடியாத உன்
பிரிவென்ற பரிசு

இலவசமாய் எதுவும்
கிடைக்கவில்லை என்பதற்காய்
பெறுமதி வாய்ந்த ஆண்கள்
அழுவது பிடிக்காதென்றாய்

ஓ..
அப்படியென்றால்
பெறுமதி வாய்ந்த
நீ கிடைக்கவில்லை என்று
நானழுவது தவறா...?

சொல் உன்னை நினைத்துக்கொண்டே
நான் இறக்க வேண்டுமென்றா..
பெறுமதி வாய்ந்த என் மறதியை
கடனாய் வாங்குவதாய் களவாடி போனாய்..?

சொல் நீ என் பெறுமதி வாய்ந்தவள்
என்பதால் உன்னை வாழ வாழ்த்தவா?

இல்லா பிரிவில் மட்டும் நீ
தனியாய் போனதை எண்ணி
திட்டவா.....?

இலவசமாய்க்கூட
யார் பார்வையும் படாதவனாய்
படு மோசமான பாலைவனமாய்க் கிடந்தேன்
எதற்கடி விழுந்தாய் என் மேல்
முதல் மழையாய்?

குடிசை வாங்க கூட பெறுமதி இல்லாதவனை
எதற்கடி கோட்டைகளை வாங்குமளவுக்கு
நம்பிக்கைகளை ஊட்டினாய்...?

அன்று உன் முதல் பார்வையிலே
நான் உருகிய போது
நான் பலவினமானவனென்று
எண்ணவில்லை

உன் பார்வையின் பலத்தை தான்
பாராட்ட நினைத்தேன் ஆனால்
இன்று என் நினைவே பார்வையாக
பார்வையே நினைவாக
இலவசமாய்க் கழிக்கிறேன்

கையெழுத்து மட்டும் போட
பேனா பிடித்த கிராமத்தவனை
கவி எழுத வைத்தவளே..

உன்னால் எப்படி முடிந்தது....?

இலவசமான என்னை
பெறுமதி வாய்ந்ததாய்
ஆக்கவும்...

பெறுமதி வாய்ந்த உன்னை
பெற்றோர்களுக்காய்
இலவசமாக்கவும்...

என்
கண்ணிரை துடைத்து விடத்தான்
உன் கரங்களுக்கு எட்டாது
என் கவிதையின் கண்ணிரை
துடைப்பதற்காகவேனும்...

ஆழமான சமுத்திரத்தையே
அடக்கி வைத்திருக்கும்
உன் கண்களால் இலவசமாய்
பார்த்து விட்டுப்போ

பெறுமதி வாய்ந்த
உன் கண்ணீரைத்தான்
தேடி திரிகிறது என் கவிதைகள்
நாளைய என் மரணத்துக்காய்
அழுவதற்கு....!




Tuesday, July 17, 2012

காதல் சொல்ல....


ஆயுதம் கைதனில் ஏந்தவில்லை
துளி இரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் யுத்தம் மட்டும் நேர்கிறது
இந்த காதலால் எனதுள்ளத்தில்...........!


கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிர் துடிக்க
இதமான வீணை
என் இதயத்தில் மீட்ட
மொத்தமாய் இழந்திட்டேன்
உன்னிடத்தில் என்னை...........!


மாயம் ஏதும் நேரவில்லை
நீ மந்திரமும் போடவில்லை
உன் கண்கள் செய்யும் வித்தையினால்
கரைந்து போனேன் உன்னிடத்தில் .......!


எட்டத்தில் நீயுமில்லை
எட்டா நிலவாய் -நான்
உன்னை நினைக்கவுமில்லை
எண்ணமிடும் நொடிதனிலே
என்னதருகில் நீ இருக்கிறாய்........!


இனிய குணம்
இதமான பேச்சு
கொஞ்சம் குறும்பு
செல்ல கோபம்
எத்தனை எத்தனையடா உன்னிடத்தே
அன்னை ஊட்டிய பால் போல்
அத்தனையும் கலந்து போனதடா
எந்தன் உதிரம் தன்னிலே.......!


மழை போல் என்னுள்
துளியென விழுந்த நீ
இன்றோ வெள்ளமென மாறி
என் நெஞ்சில் கரை புரண்டு ஓடுகின்றாய் ....!


இராத்திரி நிலவும்
குளிர் வாடை காற்றும்
நீண்ட நேர நிசப்தமும்
என்னை நிதமும் இமிசிக்கிறது
உந்தன் அருகாமையை எதிர்பார்த்து ..........!


கனிந்திட்ட காதல் சொல்ல
இந்த கன்னியிடம் வார்த்தை இல்லை
கவிதையால் காதல் சொல்ல
இந்த பேதைக்கு தெரியவில்லை
கண்ணீரால் ஓர் நொடியில்
காதல் சொல்கிறேன்
உற்று நோக்கடா
ஓர் நொடி எந்தன் விழிகளை .....!



Tuesday, July 3, 2012

என்னை பிரிந்து செல்லாதே !


என்னை பிரிந்து செல்லாதே
என் இதயம் கொத்திய
கொக்கே
நீ
எத்தனை நாள்
காத்திருந்தாய்
இதற்கு?


உனது கண்களினால்
என்னை
விண்வெளியேற்றி
ஆராய்ச்சி செய்ய
வைத்தாய்
காதல் பற்றி!


நீயேன்
வியர்வை சிந்துகிறாய் ?
பூக்களிலிருந்து பனித்துளி
விழுவது போலவேயிருக்கிறது
எனக்கு!


உன்
கூந்தலை ஏன் பறக்க விட்டு
செல்கிறாய்
காற்றில்?
பூக்கள் போராட்டம்
நடத்தும்
உன் கூந்தல் வாசனையை தடை செய்யென!


உனது
இடையே தான் பூமியின்
கடையளவு !


உதடுகளை
எச்சில் கொண்டு நனைக்காதே
சூரிய வெளிச்சத்தில்
தங்கம் மின்னுவதாகி விடும் !


நீ
நடந்து செல் பரவாயில்லை
ஊர்ந்து செல்லும் உயிரினமாவது
பூமியிலிருந்து கொண்டே
சொர்க்கம் காணட்டும்
உன் பட்டு பாதம் பட்டு !


நீ
ஒரு கணம்
சிரித்து விட்டு
செல்
வருடம் பல கடந்தும்
பாலைவனங்கள்
நீரூற்றாக கிடக்கும் !


நான் தான் கவிஞன்
ஆகிற்றே
இப்படியே
மையூற்றி எழுதும்
பேனாவில்
பொய்யூற்றி எழுதுகிறேன்
என்னை பிரிந்து செல்லாதே ! அம்மு குட்டி




கைபேசியை


நானும் நீயும் ஒரே அழைப்பொலி
வைத்து இருப்பது அறியாமல்
யாருடைய கைபேசியிலோ அழைப்பு
வந்த போது நாம் இருவருமே அவரவர்
கைபேசியை எடுத்துப்பார்த்து விட்டு
நீ என்னையும்
... நான் உன்னையும்
பார்த்து வழிந்தோமே ?
அந்த முதல் சந்திப்பு உனக்கு
ஞாபகம் இருக்கிறதா ?


தோழிக்கு சொல்வது போல்
உன் கைபேசி எண்ணை
உரக்கச்சொல்லியது எனக்காகத்
தானே என நான் பிறிதொருநாள்
கேட்ட போது நீ அவசரமாக முறைத்து
மறுத்து விட்டு
அப்படி போவதற்குள்
ஆமாம் என குறுந்தகவல் அனுப்பினாயே
ஞாபகம் இருக்கிறதா?


முதன் முதலில் நான்
உன்னை கைபேசியில் அழைத்த போது
யாரென்றே தெரியாதது போல
ஆயிரம் கேள்வி கேட்டு
வெறுப்பேற்றினாயே
ஞாபகம் இருக்கிறதா ?


அண்ணன் பக்கத்தில்
இருந்ததால் தான் அப்படி
பேச வேண்டி இருந்தது மன்னித்துக்கொள்
என நீ அனுப்பிக்கொண்டே
இருந்த குறுந்தகவல்கள்
என் குறுந்தகவல் சேமிப்பியையே
நிரப்பி விட்டது உனக்கு
தெரியுமா ?


ஏண்டா வாய் அசையுது
ஆனா ஒரு சத்தமும் கேட்க மாட்டீங்குதேடா
குசுகுசுன்னு அப்படி
என்ன தான் ரகசியம் பேசுறியோ ?
என கேட்கும் அம்மாவிடம்
சொல்லி விடட்டுமா
அந்த ரகசியத்தை என நான்
உன்னிடம் கேட்ட போது
தைரியம் இருந்தா சொல்லுடா
என குறும்பாக நீ சொன்னது
ஞாபகம் இருக்கிறதா ?


அவசரத்தில் நீ கைபேசியை வைத்து
இருந்த இடத்தைப்பார்த்து விட்டு
ஒரேயொரு நாள் நான் உன்
கைபேசியாக இருக்கிறேனே
என நான் கேட்ட போது
நீ கொட்டிய வெட்கத்தை
என் மனதினில் இன்னமும்
சேமித்து வைத்திருக்கிறேன்
தெரியுமா ?


ஏன் இன்னும் இந்த பழைய
கைபேசியையே வைத்துக்கொண்டு
மாரடிக்கிறே என கேலி பேசும்
நண்பர்களிடம் இது தான்
நீ முதன் முதலில் கொடுத்த
முத்தம் சுமந்த கைபேசி
என கூற முடியுமா ?


இப்போவெல்லாம் நம்ம பையன்
நைட்டு ரொம்ப நேரம் படிச்சுட்டு
லேட்டா தான் தூங்குறான் என
அப்பாவிடம் உற்சாகமாக
சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு தெரியுமா
நான் படித்துக்கொண்டிருப்பது மாதிரி
நடித்துக்கொண்டிருப்பதே
நாம் அனுப்பிக்கொள்ளும்
குறுந்தகவல்களுக்ககாகத்தான் என்று ?


என் தோழியிடமிருந்து வந்திருந்த
ஒரு குறுந்தகவலை நீ படித்து விட்டு
என்னிடம் சண்டையிட்டு போன
அன்று முழுவதும் நான் உனக்கு
விளக்கம் சொல்லி சொல்லி
தேய்ந்தே போனது என்
கைபேசியின் விசைப்பலகை
மட்டும் அல்ல
என் விரல்களும் தான்
என உனக்குத்தெரியுமா ?


நண்பர்களுடன் இருக்கும் போது
நீ கேட்ட முத்தத்தை நான் தரவில்லை
என கோபமாக நீ கைபேசியை அணைத்து விட்டு
சென்று விட்டாய் என்பதற்காக அடுத்த நாள்
முழுவதும் கைபேசியில் 
நான் முத்தம் கொடுத்துக்கொண்டே
இருக்க தாங்க முடியாமல்
‘போதுண்டா பேசித்தொலைக்கிறேன்
நிறுத்து ப்ளீஸ்!’ என நீ கெஞ்சலாக
கேட்ட கொஞ்சலை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?


காதலில் விழுந்த பின் 
என் கைபேசி படும்பாடு 
சொல்லி மாளாதடி 
என் செல்லமே !

Thursday, June 14, 2012

வந்து உணர்வை கொடு. . !


ஊரெல்லாம் அடங்க என்
உணர்வுகளோ விழிக்க
நான் மட்டும் தனிமையில். . !
நள்ளிரவின் துணையினில். . !
நீ விட்ட எச்சங்களை
நான் மீட்டி வாழ்கின்றேன். . !
என் மனத்தின் அதிர்வுகளை
என் விரல் வழி அசைக்கின்றேன். . !
நான் அசைக்கும் இசையினால் தான்
நானே வாழ்கின்றேன். . !
அசைகின்ற காற்றே. . !
என் அதிர்வுகளையும் எடுத்து செல்லு. . !
நீ போகும் வழிகளிலே
என் நினைவுகளையும் தூவிச்செல்லு. . !
தூவிச்செல்லும் இடங்களிலே
என் துணை இருந்து விட்டால். . !
தூங்காது மீட்டுகின்றாள் என்று
தூது கொஞ்சம் சொல்லி விடு. . !
ஏங்காது இறுகி விட்டாள் என்று
என் நிலையை சொல்லி விடு. . !
வாழ்கின்றாள் உயிரோடு
வந்து உணர்வை கொடுக்க சொல்லு. . !


Tuesday, June 12, 2012

என்னை விட்டு சென்றாய்




ஒரு நாளும் புரியாது
விண்மீன்கள் வட்டமிட்டு
சிரிக்கின்றன...


தெருவிளக்குகள்
எல்லாம் அறிவுரை
கூறிய வண்ணமாய்
இருந்தன...


தனிமையோ
என்னை பார்த்து
ஏளனமாய் இகழ்கின்றன...


கூடி இருக்கும்
கும்பல் கூத்தாடி
குமாளம் இட்டன...


காரணம்....


நீ
என்னை விட்டு
சென்றாய்
என்று நினைத்து....


அவர்களுக்கு
தெரியாது
நீ
என்னை விட்டு
செல்லவில்லை


என் காதலை
பற்றி எனக்கு
முழுதாய்
புரியவைத்தாய் என்பதை.........!





ஆறிய காயங்கள்...! ஆறாத வடுக்கள்...!


காதலியே...
நீ தந்த முத்தமும்...
அணைப்பு சுகமும்...
வெளிச்சத்தில்
மறந்திருந்தாலும்...
இருட்டுக்குத் தெரியும்
நம் அந்தரங்கம்..!


வாங்கித் தந்த பூக்கள்
வாடிப் போனாலும்...
வாசனைக்குத் தெரியும்
நாம் பூத்திருந்த காலம்..!


நனைத்துவிட்ட மழையை
கோடை மறக்கச் செய்தாலும்...
ஒதுங்கிய கோவிலின்
வாயிலுக்குத் தெரியும்
நாம் நனைந்த நாட்கள்..!


திரையரங்குகளில்
படங்கள் மாறியிருந்தாலும்...
நாற்காலிகளுக்குத் தெரியும்
நாம் மெய் மறந்த நேரங்கள்..!


அரங்கத்தில் வந்து விட்ட
நம் காதலும்...
நான் இன்றி நடந்த
உன் மணவாழ்க்கை துவக்கமும்
உன் மரணமும்...


நொறுங்கிப்போன என் இதயமும்
காலம் காயத்தை ஆற்றியது..!
ஆனால் வடுக்கள்...


இனி யாரிடமும் காட்டி...
பெருமைபட்டுக் கொள்ள
முடியாது என்றாலும்...
நீ கொடுத்த ஒற்றை ரோஜா...
காய்ந்து கசங்கி...
என்னிடம் பத்திரமாய்
ரகசியமாய்...
வலிக்கின்றன அதன் ரணங்கள்..!
ஊருக்குத் தெரியாதிருந்தாலும்
உள்ளுக்குள் அழுகை இருக்கும்..!



ஆண்டவன் விதித்த விதியோ !


இனியும் ஒரு ஜன்மம் வேண்டும் என் காதலியுடன் சேர்ந்து வாழ !
என் உலகமே ! உன்னை உயிருக்கு உயிராக காதலித்தேனே !
சுவாசிக்காமல் கூட இருந்தேன் !
சுவாசம் கொடுக்க நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் !
கண்ணில் தூசு விழுந்தால் கூட கண்ணை கசகுவதில்லை !
கண்ணில் உன் பிம்பம் இருந்ததினால் !
ஏங்கி ஏங்கி தவித்தேன் நீ என்னுடன் பேசும்
அன்பான வார்த்தைகளுக்காக !
பெரிய சோகங்களும் தவிடு பொடியானது !
அன்பே சோகத்திற்கு மருந்தாய் நீ இருந்ததால் !
ஆனால் ஏனடி மறுத்தாய் ?
நீ என் காதலை மறுத்ததை ஏற்று கொண்ட என் இதயம் !
உண்மையில் ஏற்று கொள்ளவில்லை !!
இன்னொருவன் காதலை உன்னிடம் சொன்னதும் ...
நீ ஏற்று கொண்டதை ...............................................
உண்மையில் என் உயிர் துடித்து கொண்டிருக்கும்
உன் இதயத்தில் கை வைத்து சொல் !
என்னை போல் உன்னை நேசித்தவர் எவருமுண்டோ !
தாங்கமுடியவில்லை
என் உதடுகள் பேசிய அன்பான வார்த்தைகளை கேட்ட
உன் காதுகள் !!!!
இனிமேல் அவன் பேசுவதை மட்டும் கேட்கும் வேதனையே !
எனக்கு மட்டும் சொந்தமான உன் அங்கங்கள் ! அய்யோ !
எப்படி சொல்வது ! யாரிடம் சொல்லி முறையிடுவது !
அரபி கடலும் ஒப்பாரி வைக்கிறது !
என் அழுகையின் ஆழத்தை தாங்க முடியாமல் !
இவை அனைத்தும் காலம் கடந்து காதலை
சொன்னதால் வந்த வினையோ !
இல்லை உன் நினைவுகளுடன் மட்டும் நான் வாழ
ஆண்டவன் விதித்த விதியோ !
உண்மையில் இதுவரை என் அன்பின் ஆழத்தை
நீ புரிந்து கொள்ளவில்லையா !
நீ இருந்த என் இதயத்தில் எவரேனும் வந்தால் !
துரத்தி அடிக்கின்றன உன் நினைவுகள் !
உன் நினைவுகளுக்கு பிடித்த என்னை !
ஏன் உனக்கு மட்டும் பிடிக்கவில்லை !
உன் மனதில் என்னக்கு இம்மியளவு கூட
இடமில்லை என்பது எனக்கு தெரியும் !
இருந்தாலும்
என்னை விட்டு இம்மியளவும் நீங்காமல்
நீ இருப்பாய் !
தயவு செய்து என்னை காதலில் தோற்றவன்
என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் !
எனக்கு இனியும் ஒரு ஜன்மம் வேண்டும்
என் காதலியுடன் சேர்ந்து வாழ !


Monday, June 11, 2012

உன் கண்ணீரை ஏந்தினால்

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில் நிலவின் துணை
கொண்டு எழுதிய கவிதை இது


தயவு செய்து வாசித்து விடாதே
உன் கண்ணீரை ஏந்தினால் என்
கவிதை இறந்து விடும்


காலங்கள் கரைந்தாலும் கரை
சேராத நதியாய் தேங்கிய படியே
கிடக்கிறது என் காதல் உன்னால்


காதல் எனும் வானத்தில் நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை எண்ணிய படியே
சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான்


என் காதல் உன்னை மட்டும் காதலிக்க
கற்றுத்தரவில்லை உன்னைத்தவிர யாரையும்
காதலிக்ககூடாது என்பதையும் தான் கற்றுத்தந்தது


உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை
நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின்
அழுகுரல் தான்


உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ
என்னோடு இருந்த போது ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் இருந்தது என் வாழ்க்கை என்று


நீ மறந்திருக்கக்கூடும் நான் உன் இதயத்தை
காதலால் தான் வாங்கிக்கொண்டேன் என்பதை
ஆனால் நான் மறக்கவில்லை நீ வார்த்தைகள்
எனும் அடியாட்களைக்கொண்டு என்னை
அகதியாய் விரட்டி அடித்ததை


என்றோ ஓர் நாள் யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் உன் இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில் சந்தோசப்படாலும்


உன் இதயத்தில் தொடர்ந்து வாழ
வாய்ப்பில்லாமல் போனதை விட
உன் இதயத்தில் நான் இறக்காமல்
போனதில் கவலை தான் எனக்கு


உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும் தான் பாவம் அது நான்
அழுதால் உடனே அழ அரம்பிக்கிறது இருவரில்
யார் அழுதாலும் உன்னால் குறையப்போவது
எங்கள் அயுள் தானே


பாவப்பட்டவனின் கைக்கு விலை போன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்


இன்று என்னை விட என் பேனா அதிகமாக
அழுகிறது பாவம் நான் எனக்கிருக்கும்
உறவை அழ விட்டு விட்டு என்ன செய்யப்
போகிறேன் எனவே உனக்கு சொல்ல
வந்ததை சொல்லி விடுகிறேன்


இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி என்னைக்
கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்


முடிந்தால் நான் இறந்த மூன்றாம் நாள்
வா காதல் சாம்பலோடு என்னை சேர்த்து
அள்ளலாம்






இதயம் வலிக்கிறது..

என் வழ்வை புதுபிக்கும்
வழிதேடி வெகுதுரம் நடந்து விட்டேன்.
அச்சமயம் ஒரு நாள்.


இணையத்தில்..
நான் எதிர்பார்த்து..
எதிர்பாராமல் கிடைத்த உன் புகைப்படம்..
பார்த்தவுடன்..
நான் இதுவரை அறியாத ஒரு உணர்வு..
சந்தோஷமல்ல..
துக்கமல்ல..
அழுகையல்ல..
ம்..


அட..
எவ்வளவு அழகாய்..
சிரித்து கொண்டிருக்கிறாய்??
சந்தோஷமாய் இருக்கிறாய்..
ஆச்சரியமாய் இருக்கிறது..!
உனக்கு என் பற்றிய நினைவுகளே
வருவதில்லையா..?
இல்லை
வரும்..
வராமல் இருக்காது..
நீ நிச்சயம் நினைப்பாய்…
அதெப்படி நினைக்காமல் இருப்பாய்..??
ஒரு நாளில்..ஒரு நாளிகயாவது நினைத்திருப்பாய்..
சமாதானம் செய்து கொள்கிறேன்..
என்னை நானே…
நான் தான் உன்னை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறேன்..
நீ?
அது சரி..
உன்னில் பிழையொன்றுமில்லை..
நீ என்னை காதலித்தாய்..
நான் அறிவேன்..
நான் உன்னை காதலித்தேன்..
நீ அறிய மாட்டாய்..
உன்னை பொறுத்த வரையில்..
நான் முடிந்து போன காதல்..
என்னை பொறுத்த வரையில்..
நீ..
தெரியவில்லை..
உன்னை காதலித்து கரம் பிடிப்பதற்கு
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன??
‘நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்காது’ என்பது..
உன் விசயத்தில் ..
சரியாகத்தான் இருக்கிறது…
என்னுள் புதைந்து கிடக்கும்..
எண்ண அலைகளை அறிவாயா..
இந்த அலைகள் உன்னை நிட்சயம்
வந்து தாக்கும்..
ம்ம்..
மீண்டும் இன்னுமொரு சமாதானம்..


இனி நாம் பார்க்க போவதில்லை..
ம்ம்..
பிறகு ஏன்??
அர்த்தமிலா பல கேள்விகள்..
என்னை நானே கேட்டு கொண்டிருக்கிறேன்..
உன்னைப்பாரத்தவாறே..


விழிகள் கனக்கின்றது…
கண்ணீர் வழிகிறது..
இதயம் வலிக்கிறது..
உன் நினைவுகள்..
என்னுள் ஒரு..
பிரளயத்தையே ஏற்படுத்துகிறது..
இவை எதையுமே அறியாமல்..


நீ மட்டும்..


இன்னும்…
சிரித்து கொண்டே இருக்கிறாய்..


உன் நினைவுகளில்..


அன்பே ....
என் அருகில் நீ இல்லாத போது...
உன் நினைவுகளில்...
என் கண்கள்...
கண்ணீரை வடித்தது....
என் பேனாவோ...
கவிதைகளாய் வடித்தது...


இன்றும் ..
வாழ்கிறது ..
உன் நினைவுகள்...
என் பேனாவின் கண்ணீராய் ...


கண்மணியே காதல் என்றால்
உயிர் என்றாய்
காதலுக்காய் கண்ணீர் சிந்தி
தினமும் கற்பனையில்..
கவி வடித்தாய் ....


உன் வரிகளை
நேசித்ததற்காக ..
ஏன் அந்த வலிகளை
நிஜமாகவே
எனக்கு கொடுத்தாய்


ஓர் இதயம் நேசிப்பதை ....
சில சமயம் மற்ற இதயமும் ...
நேசிப்பதில்லை ...
இரு இதயமும் நேசிப்பதை ...
சில சமயம் இறைவன் கூட....
நேசிப்பதில்லை ...



உண்மையும் போலியும்!!!


என் காதல் சொன்னதும்
கொஞ்ச நேரம் கேட்டாய்
என்னை பிடிக்கும் என்று
சொல்லத்தான் என்று நினைத்தேன்
பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு தகுந்த காரணம் தான்
இத்தனை நாளும் தேடிக்கொண்டிருந்தாய் என்று
இன்று தான் தெரிய வந்தது
கோட்டை கட்டி
கூட்டம் கூட்டி
குடி புகலாம் என்ற பொழுது
நண்பராகி விடலாம் என்று சொல்லி
நழுவப்பார்க்கிறாய்
என் கல்லூரி வாழ்க்கையும்
நான்கு வருடங்களும்
கழிந்த பின்பு
சிரித்துப்பேசிய நீ
சீரியஷ் ஆகிறாய்
வீடு வாகனம் சொத்து என்று
பட்டியல் நீட்டுகிறாய்
இதுவரை நாளும்
ஃப்ரீ(free) ரீலோட்டுக்கும்
கெண்டீனின் பில்லுக்கும் தானா
என்னை சமத்து என்றாய்???
என் காதல் ஒன்றே போதும்
என்று சத்தியம் செய்து சொன்னவளா நீ


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
உன் பெற்றோர் உனக்கு வரம் பார்க்கையில்
ஆல்ஃபபெட் (Alphabet) தெரியாதவன் என்று 
நீயும் கேலியாய்ப்பார்க்கிறாய்
ஹ்ம்ம்ம்
உமக்கென்ன...ஊர் சுற்றி உலா வரவும்
ஓசீயிலேயே காலம் கடத்தவும்
என்னைப்போல் யாரேனும் கோமாளிகள் தானே தேவை...


பெற்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும்
உத்தமிகள் போலல்லவா பேத்திக்கொள்கிறீர்கள்
ஆண்களை நீங்கள் முட்டாலென்று உங்களுக்குள் அல்லவா பேசிக்கொள்கிறீர்கள்
ஆம் நாங்கள் முட்டால்கள் தான்
ஆதலால் தானே வேண்டிய பக்கமெல்லாம் எம்மை வளைக்கிறீர்கள்
சாவிக்கோவை போல இடுப்பில் சொறுகிறீர்கள்


ஆனால் உத்தமர்களும் கூட
அது பற்றித்தானே நீங்கள் அலட்டிக்கொள்வதில்லை
பரவாயில்லை
கண்ணிப்பெண்களின் சாபங்கள்தான் பலிக்குமென்று கதையுண்டு
கண்ணி ஆண்கள் எப்போதேனும் பலித்த கதை கேட்டதுண்டோ
எங்கள் சாபங்களும் பலிக்கும் ஆனால்
எங்களுக்கு சபதங்களே பிடிக்கும்


என்னை ஏமாற்றியதாய் நீ நினைக்கிறாய்
இல்லை என்னைக்காப்பாற்றினாய் என்று நான் நினைக்கிறேன்
நம்பிக்கைத் நம்பிக்கைத்துரோகம் உனக்கு சகஜமாய் விட்டது
அதன் வலிகள் எனக்கு பலம் தந்து விட்டன
சுதாகரித்துக்கொண்டேன்


உத்தமர்கள் இருக்கையில் உத்தமிகளும் இருப்பார்கள்
குற்றத்திற்கு தண்டனையும்
நற்செயலுக்கு சன்மானமும் நிச்சயமாக கிடைக்கும்


எங்கேனும் நாம் சந்தித்துக்கொண்டால் அன்று தான் நிலவரம் புரியும்
சடப்பொருட்களில் நம்பிக்கை வைத்த நீயும்
உண்மையில் திடம் கொண்ட நானும்
நிறுத்துப்பார்க்கலாம்...
நிஜம் உனக்குப்புரியாலாம்...
அது வரை நான்...
கடற்கரைகளில் சுகமாக காற்று வாங்குவேன்
கடைத்தெருக்களில் சுதந்திரமாக நடமாடுவேன்
தேவதை வாசம் தேடி
பேதை தரிசனம் வேண்டி



உன் கண்ணீரையாவது சிந்தி விட்டு போ!

என் வாழ்க்கை
பக்கங்களுக்கு
பற்றாக்குறை


அதில்
உன் நினைவுகளை
எழுத வேண்டுமென்று நினைத்ததால்.


முதல் பக்கத்தில்
எழுதப்போவதென்னவோ
நான் தான்.


உன்னை
முதன் முதலில்
பார்த்த நாளை
என் மூன்றாம்
பக்கத்தில் எழுதுகிறேன்.


முதல் இரண்டு பக்கங்கள்
நான் கண்ட
கனவுகளில்
வந்த உன்
உருவங்களை பற்றி
எழுதுவதற்க்காக!


என் இறுதி பக்கங்களில்
முடிக்கபடாமலே
போய் விட்டன.


நீ என்னை பிரிந்ததால்
மட்டுமல்ல.
என் உயிரும்
என்னை பிரிந்ததால்.


உன் கண்ணீரையாவது
சிந்தி விட்டு போ....
என்
இறுதி பக்கங்களுக்காக.....


அழகான வீட்டில்
அளவான குடும்பம்
பாசம் காட்ட இரு குழந்தை
அன்பான மனைவியாய்
ஆயுள் முழுதும் நீ!


இவையனைத்தும் கிடைக்குமென்றே
நித்தம் மகிழ்ந்திருந்தோம்.


புத்தம் புது வாழ்க்கைக்காக
நம் கனவுகளை
கனவென்றே எண்ணி
பிரிந்து விட்டாய்


என்னுயிர்
காதலியே!







காதலில் தோற்றால்.....


காதல் என்னும்
காட்டில் குளத்தில் தண்ணீர் குடிக்க சென்றேன்
அங்கு குளம் என்னை பார்த்து
சொன்னது

நீ
காதலிக்கும் தண்ணீர்
குடிக்கிறாய்
அதனால் உன் முகம்
மட்டும் தண்ணீரில்
மிதக்குது
ஒருவேளை நீ காதலில்
தோற்று விட்டால்
உன் உடம்பும் தண்ணீரில்
மிதக்கும்

பின்பு
பூ பறிக்க சென்றேன்
பூ என்னை பார்த்து
சொன்னது
நீ காதலிக்கும் போது
என்னை பறிக்கிறாய்
அதனால்
என்னை நீ
தாங்குகிறாய்
நீ காதலில் தோற்றால்
உன்னை நான்
தாங்குவேன் கல்லறையில் !

நான் தனிமையில்
சென்றேன்
தனிமையும் என்னிடம்
பேசியது
காதலிக்கும் போது
தனிமையும் சுகமாகத்தான்
இருக்கும்
காதலில் தோற்றால்
இனிமை கூட
தனிமையாக மாறும் !

Sunday, June 3, 2012

தனிமை

தொலைத்தலும் இழத்தலும்
கவலையும் சந்தோசமும்
என் வாழ்வின் வழமையான ஒன்று
எல்லாம் இருந்தும்


எதுவுமே இல்லாதவளாய்
வெறுமையாய் என்னையே நான் வெறுத்து
நின்ற வேளை விழிகளுக்கு ஒளி தந்து
இருளை அகற்றியவனும் நீ தான்


தலை நிமிர்ந்து வாழு
உனக்காக நான் இருப்பேன்
என்றவனும் நீ தான்


அன்புக்கு இலக்கணம் சொன்னவனும்
நீயே அதனாலேயே என் பயணம்
தொடர்ந்து சென்றது உன் பின்னால்


உன்னை நம்பி நானிருந்தேன் ஆனால்
நீயோ ஒரு நொடிப்பொழுதில்
என்னை கலங்க வைத்தது ஏனோ?
ஓரக்கண்ணின் கசிவைத்தவிர


மெளனித்தவளாய் நானானேன் இன்று


வாழ்வில் எதுவும் நிரந்திரமல்ல என்று
அழகாய் பதிய வைத்து சென்றாய்
யாரோ ஒருவருக்காக என் அன்பை


எப்படி உன்னால் விலை பேச முடிந்தது
பூஜித்தபடி நான் இப்போ வெறித்த
மனதுடன் கால்கள் மட்டும்
தனியே நடை போடுகிறது


என்றும் என் வாழ்வின் உற்ற துணை
தனிமை மட்டும் தான் ....
தனிமை கொடுமையாக தான் இருக்கிறது
என் வாழ்வு நிரந்திரமற்றது


அதில் நீயும் நிரந்திரமற்றவன் - இருந்தும்
என் மனம் சொல்கிறது
முதலும் முடிவும் நீதான் என்று...





புரியவில்லையடி


புரியவில்லையடி அன்பே...
நீ நடத்தும் நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!


மறந்து விட்டேன் உன்னை.....
என்று தான் சொல்ல நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும்
மறுகணம் நினைவில் நீ!!!


பிரிந்து விட்ட பின்னும்
உன் பெயர் படித்தால்
உள்ளம் புல்லரிப்பது என்னவோ
உண்மை தான் அன்பே..


இந்த முறை உன் பிரிவு
என்னை ஸ்தம்பிக்க செய்யவில்லை.....
காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்!!!..


போகும் போக்கில் புரியவைத்து
விட்டாய் வாழ்வு பொய் என்று!!!


இனி சேர்ந்து வாழும் விருப்பம் இல்லை..
ஆனால் உன்னை தவிர ஒருவருக்கும்
என் வாழ்வில் இடமுமில்லை!!!


அன்பே...!!!!
இறுதிவரை உன்னுடன் இருக்க
விரும்பினேன்.....
நீயோ பாதியிலேயே விட்டு
சென்று விட்டாய்...


உன்னிடம் நன் யாசிப்பது ஒன்று தான்.......
உன் வாழ்வில் என்றேனும்
ஒருகணம் என்னை பார்க்க நேர்ந்தால்???
உன் புன்னகையை உதிர்த்து
விட்டு செல் அன்பே..


முகத்தை திருப்பிக்கொண்டு
மட்டும் போய் விடாதே!!!...



Saturday, May 26, 2012

"உன்" உயிராக.......

காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் "கல்யாணத்தில்" காட்ட
மறந்துஇ மறுத்து விட்டாய்..!..

உன் "கண்களில்" இருக்கும்
என் "உருவத்தை" ஏனோ..
கண்ணீரில் கரைக்கிறாய்...

கரணம் "ஆயிரம்" இருக்கும்
அதற்காக "காதலை"
மறுப்பதா?....

அன்பே!
சூழ்நிலை காரணமாய்
நீ "என்னை"
மறந்து வேறொரு வரை
"திருமணம்"
செய்தாலும்...

உன்னை வாழ்த்த வருவேன்...
அதுதான் என் கடைசி சந்திப்பு
என "நினைக்காதே?....

நீ என்னை
ஏமாற்றியதற்காக உனக்கு
"வலியை" தருவேன்..!
வயிற்றில் எட்டி "உதைப்பேன்"
உன் "கருவறையிலிருந்து"
"அழுது" கொண்டே வெளிவருவேன்....
அப்போதும் "உன்" உயிராக.......

Tuesday, May 22, 2012

கண்ணீர்த் துளிகள்


உன்னை மறக்க முடியாமல்
நான் அழுத நேரங்கள்
என் கண்ணீர்த் துளிகள் கன்னங்களை வருடி
கீழே வழிந்தன....

அப்போதும் நீ உன் விரல்களால்
என் கன்னத்தை வருடிய பொழுதுகளே
என் நினைவில் தோன்றின...

வறண்ட என் உதட்டை நாவால் நனைத்தேன்...
நீ உன் உதடுகளை
எனக்கென கொடுத்த நிமிடங்களே
கண் முன் தெரிந்தன...

என் தாயின் அணைப்பிலும்
உன் ஸ்பரிசத்தையே உணர்ந்தேன்..

நெற்றியில் ஆடிய முடியை ஒதுக்கினேன்..
என் கூந்தலை நீ
கோதிய சுகத்தையே நான் உணர்ந்தேன்..
பலர் கூறினர்

உன்னை மறக்கும்படி..
என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று
அதைப் பிடுங்கி வெளியே எறிந்தேன்...
இதயத்தில் மட்டுமா நீ இருக்கிறாய்???

இதயத்தின் துடிப்பால்
என்னுள்ளே ஓடிய உதிரமும்
உனக்கு தானே சொந்தம்??
அதையும் வற்றும்படி செய்தேன்..

என் உடலிலும் உன்
கை ரேகையைக் கண்டேன்..
அதையும் எரித்தேன்..

எனினும்
என் ஆவியிலும் உன் சுவாசம் உள்ளது..
என் மடமையைக் கண்டு
அது எள்ளி நகையாடியது..
என் ஆன்மாவில் உள்ள 'ஆண்' நீதான் என்று..
ஆன்மாவிற்கு அழிவில்லை என்பர்..
என்னுள்ளே இருக்கும் உனக்கும் தான்...

சொல்லிவிடு பெண்ணே...








காதலை தேடினேன்
காதலியாய் நீ வந்தாய்
என் வழி மறந்து விழி மூடி
உன் வழி வந்தேன்
கரம்கோர்த்து கைபிடித்து
பயணித்தேன் உன்னோடு
செல்லும் வழி அறியவில்லை
வழித்துணையாய் நீ வந்ததால்....

இன்று கண் திறந்து
பார்கிறேன் கடந்து வந்த
பாதைகள் தெரியவில்லை
நீ என்னோடு இல்லை என்பதை
மட்டும் உணர்கிறேன்
என் காதோடு கதைபேசிய உன்
உதடுகளை காணவில்லை
என் சுவாசம் தீண்டிய உன்
சுவாச காற்றும் அருகில் இல்லை
என் நிழல் சூழ்ந்த உன்
நிழல் காணவில்லை
என் விரல் கோர்த்த உன்
விரல்கள் காணவில்லை
ஏனோ தடுமாறுகிறேன்
நீ பிரிந்து சென்றுவிட்டாய் என
ஆனாலும் நண்ப மறுக்கிறது மனது....

காதல் சுவாசம் தந்து
என்னில் சிலநாள் வசித்துவிட்டு போனாய்
வசந்தமிழந்து போனது என் வாழ்நாள்.....

காதல் வந்த காரணம் அறியும் முன்பே
காதல் தோல்விதனை அறிய வைத்தாய்
காரணம் கேட்டால் யாரென எனை கேக்கிறாய்....

பிரியும் வரை தெரியவில்லை
நீ பிரிந்து செல்வாய் என
அறிந்தும் அறியாமலும் போன
என் காதல் நாட்களை புரிந்தும் புரியாமலும்
தனிமையில் புலம்பி நிற்கிறேன்....

காதல் சுகத்தில் திளைத்தவன்
காதல் வலியை ஏற்க்க மறுக்கிறேன்
இரண்டும் உன்னிடமே கற்றுக்கொண்டேன்...

மரணம் கூட வலியில்லை தினம்
உன்னால் மரணித்து பிறக்க கற்றுக்கொண்டேன்
தினம் உன் நினைவால்
தற்கொலை முயற்சி என்னில்
எப்படி நீ அறிவாய் தினம்
என் மனம் தற்கொலை செய்து
மரணவாசல் சென்றுவிட்டு மீண்டு வருவதை....

என்மீது காதல் வரவில்லை என்று
சொல்லிருக்கலாம்
ஒருதலை ராகமாய்
ஒரு வரி கவிதையாய்
ஒரு கை ஓசையாய்
உன் புகழ் பாடி உன்
நிழல்தனை நிஜமாக்கி வாழ்ந்திருப்பேன்.....

ஏன் என் காதலை ஏற்றாய்
இன்று எனை ஏற்க்க மறுக்கிறாய்
தனிமை எனை வாட்ட
தள்ளாடி விழுகிறேன் மரண பள்ளத்தில்
கை கொடுத்து தூக்க வேண்டாம்
காரணம் மட்டும் சொல்லிவிடு
மறுபிறவியில் உனக்கு பிடித்தவனாய் பிறப்பேன்
இன்று மகிழ்ச்சியோடு மரணிப்பேன்
காரணம் மட்டும் சொல்லிவிடு பெண்ணே...

Sunday, May 20, 2012

உயிர் கொடு...


இனிப்பைத் தேடி வந்த
எறும்பான என் மனதை
காலால் மிதித்துக் கொன்றது விதி!

வசந்தத்தின் வாசல் திறக்குமென நினைத்தேன்
வாடைக்காற்றுப் பட்டு,
வண்ணப்பூவாய் மலர்வேன் என மகிழ்ந்தேன்
இவை அனைத்தும் கண்முன்னே
வெறும் பகல்கனவாய்த் தோன்றி மறைந்தன!

உன்னோடு இருக்கையில்,
கருவறையின் வெட்பத்தை உணர்ந்தேன்
மணவறையின் மகிழ்ச்சியை அடைந்தேன்

ஆனால் இறுதியில்,
கல்லறையின் துக்கத்தை அளித்துச் சென்றாய்...

காகிதப்பூவில் தேனெடுக்கச் சென்ற
வண்டாக நான்...
வெறும் கனவுகள் கலைந்தாலும் பரவாயில்லை
என் வாழ்க்கையே தொலைந்ததை
எங்கு நான் கூற??

கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லை என்பர்..
எனக்கோஇவாய்க்கு எட்டியும்
வயிறு நிரம்பவில்லை...

மனதோடு முக்காலி போட்டு அமர்ந்துவிட்டது...
தொலைந்தது என் காதல் மட்டுமல்ல..
என் உயிருக்கு இருந்த காவலும் தான்..

இதயமே நொறுங்கியது..
எனினும்,
அதில் செதுக்கியிருந்த
உனது பெயர் மட்டும்
சிற்பமாய் மிளிர்ந்தது...

கவிஞன் பிழையாக எழுதி,
கிழித்துக் கசக்கி எறிந்த காகிதம்தான் நான்,
என்னைவிட சிறந்த கவிதையை நீ வடிக்கலாம்..
ஆனால்,
என் மீது பட்ட உன் கைரேகையை
யார் வந்து அழிப்பது?

என் கண்ணோரம் வழியும் உதிரத்தை
யார் வருந்தித் துடைப்பது?

நீ கூறிய ஒரு வார்த்தையில்
பிரிந்து போன என் உயிரை
யார் வந்து பெற்றுக் கொடுப்பது??

எனக்குத் தெரியும்...
உனக்கும்கூட தெரியும்...
உன்னைத் தவிர
வேறு யாராலும் அது இயலாதென்று...

உன்னை எதிர்பார்த்து,
நீ வரும் வழி தேடி
காத்து நிற்கிறேன்..
விரைவில் வந்து
உயிரற்ற என் உடலுக்கு
உயிர் கொடு...





ஒரு பெண்ணின் கதறல். . !


கற்பிழந்தவள் நான்
கவிதைக்கு சொந்தக்காரி. . !
பொய்க்காதல் புலவனே. . !
காரணமில்லாமல் வந்தாய்
காந்த வார்த்தைகள் கோர்த்து. . !
கண்டவுடன் கொண்டாய்
காதல் ஒன்றை. . !
முற்பகல் பிற்பகலாய்
எப்பொழுதும்
நினைத்திருந்தேன். . !
முழு காதலில்
மூழ்கி முட்டாள் ஆனவள்
நான்தானே. . !
நல்லவன் நீயடா என்று
நினைத்துதானே
விட்டுக்கொடுத்தேன்
என்னை
தொட்டுக்கொள்ளடா என்று. . !
தப்பானதே தவறுதலாக. . !
இரவிலே பிறந்துகிடந்தேன். . !
இராட்சச ரசிகா
நம்மை மறந்துகிடந்தேன். . !
என்னையோ மறந்து சென்றாய்
எங்கோ மறைந்து கொண்டு. . !
விடிந்தவுடன் கள்வன்
ஆனாயடா
நீ. . !
என்னருகில் மட்டும்
பணமிருந்திருந்தால்
என்ன பெயரோ
எனக்கென்ன பெயரோ. . ?
நல்லவேளை
இன்றும் நான்
கற்பிழந்தவள்தான். . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥

தாஜ்மலும் நானுமும்



தாஜ்மகாலே
உன்னை போலதான் நானும்
நீ காதலுடன் வாழ்கிறாய்
நானும் காதலுடன் வாழ்கிறேன்


உண்மை காதலில்
நீ நிலைத்திருக்கிராய்
உண்மை காதலில்
நான் தவித்தொண்டு இருக்கிறேன்


உண்மை காதலினால்
உன்னில் வலிகள் இல்லை
உண்மை காதலினால்
என்னில் வலிகள்


நீ காதலுக்காக
கண்ணீர் விட்டு கலங்கவில்லை
நான் காதலுக்காக
கண்ணீர் வடித்து கலங்குகிறேன்


நீ நிலைத்திருக்கிராய்
உலக காதலுக்காக
நான் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன்
அவளை நேசிப்பதற்காக


உன் கற்கள் ஒவ்வொரும் சொல்லும்
உன் உண்மை காதலை
என் அணுக்கள் ஒவ்வொரும் சொல்லும்
என் உண்மை காதலை


நீ உலகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
உலக காதலுக்காக
என் உயிருள்ளவரை வாழ்கிறேன்
என் அவளின் காதலுக்காக


உலக காதல் காவியமாக
நீ வாழ்கிறாய்
உன் காதல் காவியத்தில்
நானும் ஒன்றாகி விடுவேன்
என் மரணத்தின் பின்



காதல்


கண்கள் பார்த்து
வளர்ந்த காதல்.

கண்ணீராய் கரைந்து.....
தூரங்கள் பிரிந்து......
வலிகளை சுமந்து.....
இன்பமான துன்பத்தில்......
இதயங்கள் வாழ்ந்தாலும்.....

புரியாத உணர்வு.....
அறியாத சிரிப்பு.....
மறையாத கனவு.....
களையாத நினைவு......
காயாத காயம் ......

என்று .............................

நான்கு சுவர்களில்
நித்தம் உந்தன்
நினைவுகளால் துன்பம்

பிரிந்தும் பிரியாது
புரிந்தும் புரியாது
உந்தன் நினைவுகள்
பூக்கும் பொழுதுகளில்
நிலவில் உன் முகம் பார்த்து
நகரும் நரக வாழ்க்கையில்

இடை இடையே
காத்திருப்பேன் என்ற
உன் வார்த்தைகள் -என்னை
உச்சாக படுத்துதே அன்பே

Thursday, April 26, 2012

உன்னுடன் வாழ ஆசைப்பட்ட ...

என்னுயிர் நீதானே...!
ஒரு கண்ணில் நீர் கசிய
உயிரே....


உடலைவிட்டு பிரியாத
நிழலைப்போல் .....
நாம் காதல் என்னும்
நரம்பால் இணைந்தோம்......


காலன் என்னும் கோடாரியால்
நம் காதல் நரம்புகள் வெட்டப்பட்டு
என்றும் இணையாத தண்ட வாலம்போல்........
நாம் பிரிந்து இருக்கிறோம் .....


கூட்டநேரிசளின்போது
என் பெயரை யாரேனும்
உச்சரிக்க கேட்டால்........
அந்த கணம் செவிடகிவிடு.......


தொலைதூர பயணத்திலோ
திருவிழ கூடத்திலோ ......


என் சாயலில் யாரேனும் கண்டால்.....
அந்த கணம் குருடாகிவிடு.....
தயவு செய்து உன் மழலைக்கு
என் பெயரிடதே .....


முடிந்தால் உன் மரணதிற்குள்ளவது
என்னை மறந்துவிடு ........
உன்னுடன் வாழ ஆசைப்பட்ட
உன் ......