Thursday, April 26, 2012

உன்னுடன் வாழ ஆசைப்பட்ட ...

என்னுயிர் நீதானே...!
ஒரு கண்ணில் நீர் கசிய
உயிரே....


உடலைவிட்டு பிரியாத
நிழலைப்போல் .....
நாம் காதல் என்னும்
நரம்பால் இணைந்தோம்......


காலன் என்னும் கோடாரியால்
நம் காதல் நரம்புகள் வெட்டப்பட்டு
என்றும் இணையாத தண்ட வாலம்போல்........
நாம் பிரிந்து இருக்கிறோம் .....


கூட்டநேரிசளின்போது
என் பெயரை யாரேனும்
உச்சரிக்க கேட்டால்........
அந்த கணம் செவிடகிவிடு.......


தொலைதூர பயணத்திலோ
திருவிழ கூடத்திலோ ......


என் சாயலில் யாரேனும் கண்டால்.....
அந்த கணம் குருடாகிவிடு.....
தயவு செய்து உன் மழலைக்கு
என் பெயரிடதே .....


முடிந்தால் உன் மரணதிற்குள்ளவது
என்னை மறந்துவிடு ........
உன்னுடன் வாழ ஆசைப்பட்ட
உன் ......





என்னைநீயும் எற்றுகொள்

ஜென்மம் முடிவதற்குள் எற்றுகொள்
காலை பூத்த பூவைப்போல
நீயும் பூத்தாய் என் இதயதுலே
மூடி வைத்த இதய கூட்டைதிறந்து பார்த்தாய்
உன் பார்வையாலே ..
உன் பார்வைபட்ட நொடியில் போச்சே
என் இதயகூட்டில் உன் உருவம் தவிர....
பார்த்த தருணம் மீண்டும் வந்தால்
மரணம்கூட ஏற்றுகொள்வேன் ..
கனவில் உயிரை கேட்டு தவித்தாய்
நேரில் கொடுத்தேன் ஏற்க மறுத்தாய் ..
ஜென்மம் முடிவதற்குள் எற்றுகொள் ...
இந்த ஜென்மம் முடிவதற்குள் மாற்றிகொள் ...
மரணம் அழைபதற்குள் எற்றுகொள்...
உடல் மனை தொடுவதற்குள் எற்றுகொள்...
அன்பே என்னை நீயும் எற்றுகொள் ...
உன் உள்ளம் முழுவதிலும் ஊற்றிகொள்...
என் பெயரினை எற்றுகொள் .......





என்னுயிர் நீதானே...!





உனக்காக எழுதுகின்றேன் -என்
உள்ளத்து உணர்வுகளை 
எத்தனை நாள் தான் மறைக்க முடியும்
உறங்காத உண்மைகளை?


கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனா மை எழுத முன்பு
எழுதி முடிக்கிறது- என்
கண்ணீர்த்துளிகள்
நீ பிரிந்த நொடிகளை


உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவனுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத்தெரியாமல்


என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப்பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று


இன்று வரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச்சிதறி
உன் நண்பியைக்கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத்துண்டிப்பதே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது


நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை -என்
தலையணை துடைத்துக்கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற என்னத்தில்
என் கதவுவரை தான் ஓடமுடிகிறது


அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழ முடியவில்லை


இன்றைய இரவு நித்திரையில் -என்
உயிர் பிரிய முன்பு
உன்னைப்பற்றிய செய்தியை அனுப்பு 


இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போன பின்பு தானடி புரிகிறது


உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி


உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறை கூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!


அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக்கொல்லுதடி


என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன் 
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச்சென்றது ஏனடி?


இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்


எப்போவாவது இந்தக்கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒரு துளிக்கண்ணீரும் சிந்தாதே 
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!


கவலைக்கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது
இன்னும்
24 மணி நேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச்செல்லும்


அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத்தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
சுதர்ஷன் எனப்பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு............


நீ உயிர் வைத்த
உன்மேல் உயிர் வைத்த சுதர்ஷன்
நெடுதூரம் பயணிக்க
முடிவு செய்து விட்டேன்


இக்கவிதை படித்து
என்னைத்தேடாதே அன்பே!
தேடானாலும் நான் கிடைக்க மாட்டேன்


கவலைப்பட்டு
கண்ணீர் வடித்து
உன் உடம்பை
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்
உனக்காக எழுதுகின்றேன் -என்
உள்ளத்து உணர்வுகளை 
எத்தனை நாள் தான் மறைக்க முடியும்
உறங்காத உண்மைகளை?

கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனா மை எழுத முன்பு
எழுதி முடிக்கிறது- என்
கண்ணீர்த்துளிகள்
நீ பிரிந்த நொடிகளை

உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவனுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத்தெரியாமல்

என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப்பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று

இன்று வரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச்சிதறி
உன் நண்பியைக்கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத்துண்டிப்பதே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது

நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை -என்
தலையணை துடைத்துக்கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற என்னத்தில்
என் கதவுவரை தான் ஓடமுடிகிறது

அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழ முடியவில்லை

இன்றைய இரவு நித்திரையில் -என்
உயிர் பிரிய முன்பு
உன்னைப்பற்றிய செய்தியை அனுப்பு 

இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போன பின்பு தானடி புரிகிறது

உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி

உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறை கூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!

அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக்கொல்லுதடி

என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன் 
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச்சென்றது ஏனடி?

இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்

எப்போவாவது இந்தக்கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒரு துளிக்கண்ணீரும் சிந்தாதே 
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!

கவலைக்கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது
இன்னும்
24 மணி நேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச்செல்லும்

அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத்தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
சுதர்ஷன் எனப்பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு............

நீ உயிர் வைத்த
உன்மேல் உயிர் வைத்த சுதர்ஷன்
நெடுதூரம் பயணிக்க
முடிவு செய்து விட்டேன்

இக்கவிதை படித்து
என்னைத்தேடாதே அன்பே!
தேடானாலும் நான் கிடைக்க மாட்டேன்

கவலைப்பட்டு
கண்ணீர் வடித்து
உன் உடம்பை
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்

Wednesday, April 18, 2012

நான் செத்து விடுவேன்!!!


உன்னோடு பேசும் ஒரு நொடி....
உன்னோடு நான் பேசும்
ஒரு ஒரு நொடியும்
உன்னை பார்க்காத
பல மணி நேரங்களில்
அசை போட
எனக்கு ஒரு முழு
விருந்தாக உள்ளது.

அது நீ என் மூச்சாக இருந்த வரை
ஆனால் இன்று நீ இன்னொரு
ஜீவனுக்கு சொந்தமான பின்
உனக்கு என்னை நினைத்து
பார்க்க கூட நிமிடம் கிடைக்காதே?

உனது வாழ்க்கை பாதை மாறியதால்
உனக்கு என்னை நினைக்க
நேரம் இருக்காது.
ஆனால் உன் நினைவலைகளில்
சிக்கிய நான் செத்து விடுவேன்.......



Friday, April 6, 2012

பேனா

என்னை மறந்து விடாதே..!
என் பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது...!!
சில நேரம் வெட்கப் புன்னைகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!!!!

உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! என் பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!!!!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!!!

அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..!!!!
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!

உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புது புது வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!!

வண்ணங்களை வகைப்படுத்த
நாசாவின் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!!!

வாரம் சென்ற பின்னும்
தனக்கான வரிகள் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே! என் நண்பன்..!!!!

அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன்
என்றும் “ என்னை மறந்து விடாதே “ ...........!!!!!!!

எங்கே

என் நிலைமைதானா உனக்கும்?
நான்
நகம் கடித்துவிட்ட - உன்
பிஞ்சுக் கைகள் எங்கே?

சொடுக்கேடுத்துவிட்ட
பஞ்சுக் கால்கள் எங்கே?

என்
மார்பு நனைத்த
சூடான சுவாசம் எங்கே?

இதமாய்
என் கன்னம் சுட்ட
ஈரமான இதழ்கள் எங்கே?

நான்
பார்த்து பார்த்துப்
பசிமறந்த
மான் விழிகள் எங்கே?

நான்
கேட்டுக் கேட்டுக்
காது நிறைந்த
தேன் மொழிகள் எங்கே?

சாப்பிட்டு
நான் கைதுடைத்த
உன் துப்பட்டா எங்கே?

போர்த்திட்டு
நான் படுத்த -உன்
புடவைகள் எங்கே?

உன்னுடன் சேர்த்து - உன்
உடைமைகளையும் இழந்து
தவிக்கிறேன் இங்கே

சொல்
என் நிலைமைதானா
உனக்கும் அங்கே?

பக்கங்கள்

வாழ்க்கையின் இறுதி பக்கங்கள்
என்
வாழ்க்கை பக்கங்களுக்கு
பற்றாக்குறை

அதில்
உன் நினைவுகளை
எழுத வேண்டுமென்று நினைத்ததால்.

முதல் பக்கத்தில்
எழுதப் போவதென்னவோ
நான் தான்!

உன்னை
முதன் முதலில்
பார்த்த நாளை
என் மூன்றாம்
பக்கத்தில் எழுதுகிறேன்.

முதல் இரண்டு பக்கங்கள்
நான் கண்ட
கனவுகளில்
வந்த உன்
உருவங்களை பற்றி
எழுதுவதற்க்காக!

என் இறுதி பக்கங்களில்
முடிக்கபடாமலே
போய்விட்டன.

நீ என்னை பிரிந்ததால்
மட்டுமல்ல.

என் உயிரும்
என்னை பிரிந்ததால்.

உன் கண்ணீரையாவது
சிந்திவிட்டு போ
என்
இறுதி பக்கங்களுக்காக.....



நீ

உனக்கான
என் காத்திருப்புக்கள்
எப்போதும் எனக்கு
அழகானவை தான்

சில நேரம்
நான் நீயும்
எதிரும்பு திரும் போல்

ஆனாலும் நாங்கள்
எபோதும் முரண் பட்டு
சண்டைகள்
பிடித்தது இல்லை.........................

என் வாழ்விலேயே
எனக்கு
அதிகம் பிடித்த
கவிதை நீ.!!!!!!!!!!!!!!!!

எத்தனை நேரம்
வேண்டுமானாலும்
நான் உனக்காக
காத்திருப்பேன்...............
.
சில நேரம்
உன்னை காத்திருக்க
வைக்கும் போது
மட்டும் நான்
நொந்து கொள்கிறேன்............

உன்னுடன் நான்
பல நேரம்
மோதிக்கொள்கிறேன்
அப்போதெல்லாம் நீ
மௌனித்து
நான்
நெகிழ்ந்து விடுகிறேன்..............

உனக்கு மட்டும்
ஒன்றாகி விடும் போது
மட்டும்
எனக்குள் ஏனோ
அழுது விடுகிறேன் நான்...............

நீயும் நானும்
பூமியில் தான் வாழ்கிறோம்
ஆனாலும்
சில நேரம் நான்
எங்கு இருகிறேன்
என்பதையே மறந்து
விடுகிறேன்
நீ இல்லாத நேரங்களில்.................
எனக்குள் ஒரு வெறுமை
அப்போதெல்லாம்..................

தனியாக நான்
வாழவும் இல்லை
தனியாக நான் வாசிக்கவும் இல்லை
அனாலும் எத்தனைபேர்
இருந்தாலும்
எல்லா நேரமும்
உன் நினைவுகள்................
என்னுடன் தனியாக

மறந்து விடத்
துணிந்து
பல நேரம்
தள்ளிப் போக
நினைக்கும் போது..................
மறக்காமல் இருக்க
எதாவது ஒன்று
செய்து விடுகிறாய்..................

இந்த மயக்கம்
தீர்ந்து
நான் தெளிய
நீ மீண்டும்
வந்து விடு
என் தேசத்துக்கு...................

மரணத்தின் வரிகள்

எழுதினேன் கவிதை மனதினுள் உன் நினைவாக

மரணம் வந்தாலும் நம்மை பிரித்துவிடாது என்று மறதியாக

மரணம் நம்மை பிரிக்கும் முன்பே நீ எங்கு சென்றாய் காதலியே

வருடமாய் என் மீது வைத்த காதலை நொடிப் பொழுது சிதறுகின்ற கண்ணாடி துகள்களை போல் ஏன் கை தவற விட்டாய் வழிகளுடன் அன்பே

மரணம் பழிவாங்க தொடங்கியது அடுத்த கணமே கோபத்தோடு துடி துடிக்க வைக்க

வஞ்சம் கொண்ட மரணம் முடிவு செய்து விட்டது என்னை காத்திரிப்பில் வைக்க

என் செய்வேன் இறப்பும் இறைவன் கையில்தான் இருக்கின்றது


நீ

கவலைகளும் ஏமாற்றங்களும்
என்னை சூழ்ந்து கொண்டதால்
கண்ணீரோடு கலந்து கொண்டிருக்கிறேன்
என் கவிதை வரிகளில்
உனக்காக நான் எழுதும்
என் காதலின் மன்னிப்பு கடிதத்தை

முறிந்து விட்டது என்று
நம் காதலை முறித்துவிட்டு போய்விட்டாய்
முறிந்து விழுந்தவனாக
இன்னும் தத்தளித்து கொண்டிருக்கிறேன்
இன்னும் உன் நினைவுகளால்

நம் காதலில் நான் செய்த பிழை என்னவென்று
இன்று வரை எனக்கு தெரியவில்லை
உனக்கு தெரிந்தால்
எனக்கு பதில் அனுப்பு

உன் வீட்டு தெருமுனைகளை
கடக்கும் போதெல்லாம்
என் கண்களை உன் வீட்டோரம்
விட்டு செல்கிறேன்
உன்னை கண்டு விடாதோ
என்ற நம்பிக்கையில்

என்னால் உனக்கு என்ன நேர்ந்தது!!! சொல்லிவிடு
களங்கமற்ற தூய்மையான காதல் தானே
நம் காதல்
என் விரல் நகம் கூட உன் மீது பட்டதில்லையே
கண் அசைவுகளாலும்
ஊமை புன்னகையோடு தானே
நம் காதலை பரிமாறிக்கொண்டோம்

உன்னிடம் பேச கூட  தயக்க படுபவன்
இன்று உன்னிடம் தயக்கமின்றி
மண்டி இடுகிறேன்
என் காதலில் பிழை ஏதும் இருந்தால்
என்னை மன்னித்து விடு

இந்த உலகத்தில் என்னை
அதிகமாக நேசித்த ஜீவன் நீ!!!
இன்று என்னை அதிகமாக வெறுக்க
என்ன காரணம்

இவன் எதுக்கும் லாயக்கில்லாதவன்
என்று சொன்னவர்கள் மத்தியில்
என்னையும் என் வாழ்க்கை முறைகளையும்
மாற்றிய தேவதை  நீ…
மற்றவர்கள் மதிக்கும் படி மாற்றியதும் நீ…

என் வாழ்க்கை முறையில் என்னை
வெற்றியாளனாய் மாற்றிய உன்னை எப்படி மறப்பேன்
சொல் தேவதையே

உன்னை மட்டுமே
நினைத்து வாழ பழகி விட்டேன்
உன்னை மட்டுமே நினைத்து வாழ்வது கூட
உனக்கு கடினமாக தோன்றினால்

என்னை மன்னித்து விடு!!!

நான் இன்றும் உன்னை நினைத்தே வாழ்ந்து கொண்டிருப்பதால்…


கைபேசி காதல்…!

நீ கை பேசி அழைப்பை துண்டித்த மறு
நொடியில் மீண்டும் அழைப்பு வருமோ..
என காத்திருக்க தொடங்கிவிடுகிறது மனது..
வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீ அழையாத என் கைபேசியை...

எடுத்தெடுத்துப் பார்க்கிறேன் நீ அனுப்பிய
பழைய குறுஞ்செய்திகளை
வினாடிகளையும் தோற்கடிக்கும் நம்
அடுத்தடுத்த பதில் பரிமாற்றங்கள்..
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய் உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி சண்டைகளில்
ஒருவருக்கொருவர் செல்லமாய் கோபித்து
சிரிக்காமல் சீண்டுவோம்..  சிணுங்கியபின் சிக்கிடுவோம்
சமாதானம் எனும் சிறையில்..
அதன் சமாதான வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது உனதன்பு...

நீ அழைத்து பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது என் கைபேசி...

காத்திருத்தல்.. காக்க வைத்தல்
இரண்டும் சுகமானதல்லவா காதலில்..!?

இப்போதெல்லாம் நீ அழைத்து பேசும்
நிமிடங்களுக்காய் காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது கை பேசியும்...

நீ


தொலைதுாரத்தில் நீ இருக்கிறாய் என்று
தெரிந்தும் யாரோ உன் பெயரை உச்சரித்தாலே
நீயாக இருக்ககூடாதா என ஏங்குகிறது 
பேதை இவள் நெஞ்சம்.......
வீதி ஒரம் நான் செல்லும் வேளையில்
உன்னைப் போல யாரும் சென்றாலே ஒதுங்கி நிற்கிறன்
ஏன் தெரியுமா ? உன்னைத் தவிர எந்தன் நெஞ்சமும் கண்களும்
இன்னொருத்தனை ரசிக்ககூடாது என்பதற்காக
மனசு உன்னை இன்னொருவனுடன் 
ஒப்பிட்டு பார்க்க கூட விரும்பவில்லை..
உந்தன் அரவணைப்பிற்காக...உன்னுடனான
நிஜங்களுக்காக மறு ஜென்மம் 
வரை காத்திருக்கிறன்...
ஆனால் என் இதயத்திற்கு
அது ஏழு ஜென்மமாய் தெரிகிறது.....

அழகி தேவை



எனக்கு ஓர் அழகி தேவை.....
அனால்,
கருவண்டு கண்கள் தேவையில்லை,
குறும்பு பார்வை தேவையில்லை,
வில்லாய் வளைந்த புருவங்கள் தேவையில்லை,
சிரித்து பேசும் உதடுகள் தேவையில்லை,
அணைக்கும் அழகு கரங்கள் தேவையில்லை,
அழிந்து போகும் வெளிப்புற அழகுகள் தேவையில்லை,


ஆயினும்,
எனக்கு ஓர் அழகி தேவை.....
கருணையான கண்கள் தேவை....
மென்மையான பார்வை தேவை....
மொழிகொண்ட புருவங்கள் தேவை...
அன்பு மொழி பேசும் உதடுகள் தேவை....
அரவணைக்கும் கரங்கள் தேவை....
மாறாத அன்பு மனம் தேவை....
மொத்தத்தில், இதயத்தால் அழகைக்கொண்ட,
அழகியே நீயே ,என் வாழ்கைதுனைவியாய்..... தேவை


காதல் கவிதைகளென…….

நீ
கண்ணீரை விட
ஆழமானவள்….
சோகத்தை விட
அழகானவள்…!


உன்னைக் காதலிப்பதற்கு
பதிலாக
மரணத்தை
காதலித்திருக்கலாம்….
அது வாக்குத்
தவறுவதேயில்லை….!

உன் பாதையும்
என் பாதையும்
வேறு வேறாக இருக்கலாம்….
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்….!

நீ என்னைப் பார்த்து
ஒரு முறைதான் சிரித்தாய்….
அதனால் நான்
வாழ்க்கை முழுவதும்
அழுதுகொண்டிருக்கிறேன்….!

தரையிலிருந்து
பொறுக்கிய காகிதத்தில்
கவிதை கிடைத்ததைப்போல்
நீ என் வாழ்க்கையில்
நேர்ந்தாய்…!

நான் உனக்குத்
தகுதி இல்லாதவனாக
இருக்கலாம்
என்னைத்
திருஷ்டிப் பொட்டாகவாவது
வைத்துக் கொள்ளேன்…!

காதலில்
கண்ணீருக்கும்
புன்னகைக்கும்
எப்போதும் போட்டி
கண்ணீரே
எப்போதும் ஜெயிக்கிறது…!

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்…!
ஊசியின் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப் போல


உன் கண்களின் அழைப்பை
நான் தவிர்க்க முடியாது
எமனின் பாசத்திலிருந்து
யார் தப்பிக்க முடியும்?


காதல்...

பலருக்கு
தொட முயன்று
தோற்றுப் போன
தூரத்து உறவு
காதல்.....!

சிலருக்கு
தொட்டுப் பார்த்து
ஷாக் அடித்த
மின்சாரக் கனவு
காதல்.....!

கண்ணில் தோன்றி
கற்பனையில் வடிவெடுத்து
காலம் உள்ளவரை
கலந்திருப்பது காதல்.....!

கண்கள் விடும்
கணைகளால் - இருதயம்
இலக்கு வைக்கப்படுவது
காதல்.....!

சுகமும்
ஓர் சுமையாக.....
அந்த சுமையும்
ஓர் சுகமாக.....
சுட்டெரிப்பது காதல்.....!

கண்களால் கதை பேசி.....
மௌனத்தால் விடை எழுதி.....
கனவை நனவாக்க
வாழ்வது காதல்.....!

அவள் கண்வெட்டு
அவன் இதயத்தில்
கல்வெட்டாகி - பின்
மின்வெட்டு நேரத்தில்
கவியாவது காதல்.....!

அவனையும் அவளையும்
பிடித்த அவர் உறவுகளுக்கு
அவர்களை பிடிப்பதில்லை.....
இதுவே காதல்.....!

ஊரெ எதிர்த்தாலும்.....
உறவுகள் கூடி தடுத்தாலும்.....
வாழ்ந்தால் உன்னோடு - இல்லை
மண்ணோடு என்று
சொல்வது காதல்.....!

இரு நெஞ்சம்
கலப்பது காதல்.....!
இருதயம் இடம்மாறி
துடிப்பது காதல்.....!

அவன் அவளுக்குள்ளும்.....
அவள் அவனுக்குள்ளும்.....
புதைவது காதல்.....!

உன்னுள்ளும் என்னுள்ளும்
வாழும் காதல்
வானம் உள்ளவரை
வாழட்டும் காதல்.....!