Wednesday, April 4, 2012

என்னடி பதில்

பார்க்கும் பல முகங்களில்
பதியும் சில முகங்களில் - அதில்
என் அகத்தினில்
உன் முகத்தினை அறிந்தேன்
இது நட்பா? காதலா?
சிரிக்கும் சில வண்டு கூட
சில வேளை மௌனிக்கிறது
ஆகாய நிலாக்கூட
சில வேளை மௌனிக்கிறது
ஆகாய நிலாக்கூட
அமவாசைக்கு
கை கொடுக்கிறது
ஆனாலும்உன்
நினைவலைகள்
தடம்பரளத் தத்தளிக்கின்றன
உனது மௌனம் கூட
ஒரு வித சம்மதத்தையே - எனக்கு
கற்றுத் தருகிறது
சுனாமியின் வேகத்தை
மிஞ்சுகிறது
உன் பார்வை வேகம்
உன்னை நினைப்பதற்குத்
தெரியும்
மறப்பதற்கு தெரியவில்லை
மறக்கிறேன்.......... மறக்கிறேன்..........
உன்னையல்ல
என்னையே!!!

No comments:

Post a Comment