Wednesday, April 4, 2012

ஆசைக்கடிதம்

என் அன்புக்காதலி!
நான் கொண்ட மங்கையவள் நீ
நிதமும் தேடிப்பார்த்த உனக்காக
வரைகிறேன் ஆசையில் ஓர் கடிதம்
கவி வரியை உச்சரிக்கும் என் இதழ்கள்
உன் உருவத்தை விழிகளில் பூட்டி வரைகிறேன்
என் அன்பானவளே உன்னைச்சரணடைந்து
பத்துத் திங்கள் நீ அறிவாயா?
வேண்டாம் அடிமை வாழ்வு
உன்னுள் ஓன்றான நான்
உனை விட்டு எப்படிப் பிரிவது?
எப்படி மறந்து வாழ்வது?
அது உன்னால் முடியுமா?
சொல்லிவிடு...........
நாட்கள் திங்கள்கள் ஆகின்றன.....
ஆண்டுகளை அழைகின்றன!
என்னை விட்டால் உனக்கு துணையார்?
இறுதி வரைக்கும் உன்னுடன் வாழ்பவன் நானே
எனை நம்பு என்னிடம் வந்துவிடு
என் துணைவி நீயே.

No comments:

Post a Comment