Wednesday, April 4, 2012

எனக்குள் நீ

சிரிக்காதே பெண்ணே!
நீ சிரிக்கிறாய்
நான் அழகிறேன்
என் காதல் உனக்கு
சிரிப்பிற்குரியதாயிருக்கலாம்
எனக்கது வாழ்க்கைக்குரியது
நீ சிரித்து சிரித்தே
சாகடித்தவர்களுடன்
என்னையும்
சேர்க்க் நினைக்காதே
இனி
நான் அழதால்
நீயும் அழவேண்டியிருக்கும்
நான் விழந்தால்
நீயும் விழவேண்டியிருக்கும்
ஏனெனில் இப்போது
உனக்கே தெரியாமல்
எனக்குள்ளே
நீயிருக்கிறாய்

No comments:

Post a Comment