Friday, April 6, 2012

உண்மைக் காதல்

பள்ளிக் காலக் காதல் - இது
பருவக் காதல்
பல்கலைக் காதல் - இது
பகிடிக் காதல்
தெருவோரக் காதல் - இது
தெரு விட்டாத காதல்
பசுஞ்சோலைக் காதல் - இது
பாசாங்குக் காதல்
திருவிழாக் காலக் காதல் - இது
திருட்டுக் காதல்
தொலைபேசிக் காதல் - இது
தொலையும் காதல்
இரு உள்ளங்கள் உணர்ந்த
உன்னதக் காதல் - இது
என்றும் அழியம உண்மைக் காதல்

1 comment: